கோவை : வடுகபாளையம் கிராமம் கிணத்துக்காடு குட்டையில் தூர்வரும் பணியினை நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி. அன்பரசன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பின்னர், நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் பேசியதாவது :- தமிழகத்தில் நீர்ஆதாரங்களை செம்மைப்படுத்தி, அதனை புனரமைத்து விவசாயிகள் பயன்பெறும் வேண்டும் என்ற நோக்கில் ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்கள் புனரமைக்கும் குடிமராமத்து திட்டம், தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழக அரசு நிலத்தடி நீர் பெருகுவதற்கும், நீராதாரம் மேம்படுவதற்கும் ஏரி, குளங்கள், கால்வாய்களை சீரமைத்திட தனிக்கவனம் செலுத்திப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. வீடுகள், பொதுக்;கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் மூலம் மழை நீர் சேகரிப்பனை மேம்படுத்திட பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பிளாஸ்டிக் கழிவுகள் நீர்நிலைகளில் தேங்காமல், நீர்நிலைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

அதனடிப்படையில், கோவை மாவட்டத்தில் சமூக ஆர்வலர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், அரசுத் துறைகள் என அனைவரின் ஒத்துழைப்புடன் ஏரி குளங்கள் தூர்வரும் பணி மிக தீவரமாக நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை மாவட்டம் வணிக நிறுவனங்கள், தொழிற் நிறுவனங்கள் அதிகம் இருக்கக்கூடியதாக உள்ளது. சமூக பொறுப்புணர்வு நிதி ஒருங்கிணைக்கப்பட்டு நீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. நொய்யல், கௌசிகா நதி மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகள், குளங்கள், கால்வாய்கள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு சொந்தமான சிறுபாசன கம்மாய்கள், ஊரணிகள் போன்றவை சீரமைக்க முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் சூலூர் வட்டம் வடுகம்பாளையம் கிராமம் எங்கள் நிறுவனத்தின் பங்களிப்புடன் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை, பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஒத்துழைப்புடன் இன்று கிணத்துக்காடு குட்டையை தூர்வரும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மேற்கு பகுதி நீர் ஆதாரம் கொண்ட பகுதியாக உள்ளது. கிழக்கு பகுதி நீர் ஆதாரம் இல்லாத பகுதியாகவும், மழை நீரை மட்டுமே நம்பியிருக்கும் பகுதியாகவும் உள்ளது. எனவே, வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்கு முன்பாகவே நீர் நிலைகள் குளங்கள், கம்மாய்கள், தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், தமிழக அரசு நீர் ஆதாரங்களைப் பெருக்கும் வகையில் அதிகப்படியான நிதியினை ஒதுக்கி முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. பொதுமக்களும், விவசாயிகளும் தங்கள் பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களை தூர்வரும் பணியில் பங்கேற்று பயனடைய வேண்டும், என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.