கோவை மாநகராட்சி குறை தீர்ப்பு முகாமில் 93 பேர் கோரிக்கை மனு : 4 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச. பிரசன்னா ராமசாமியிடம் 93 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்களின் 4 கோரிக்கைகள் உடனடியாக தீர்வு காணப்பட்டது.

கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச. பிரசன்னா ராமசாமியிடம் 93 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்களின் 4 கோரிக்கைகள் உடனடியாக தீர்வு காணப்பட்டது.



கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமியின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளரிடம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 93 கோரிக்கை மனுக்களை அளித்தனர். சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். இதில், மத்திய மண்டலத்தைச் சேர்ந்த இரண்டு பயனாளிகளுக்கு பெயர் திருத்தச்சான்றிதழ் உத்தரவையும், இரண்டு மனுதாரரின் கோரிக்கையின்படி குப்பைகள் அகற்ற உடனடி நடவடிக்கையும், ஆகமொத்தம் 4 பேரின் கோரிக்கையின் மீது மாநகராட்சி துணை ஆணையாளரால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 



இக்கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாநகராட்சி துணை ஆணையாளரால் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாநகரப் பொறியாளர் ஆ. லட்சுமணன், மண்டல உதவி ஆணையர்கள் தி.ரா.ரவி, சரவணன், அண்ணாத்துரை, செந்தில்குமார் ரத்தினம், ம.செல்வன், மகேஷ்கனகராஜ், உதவி ஆணையர் (பணியமைப்பு) மோகனசுந்தரி, செயற்பொறியாளர் ஞானவேல், செயற்பொறியாளர் (திட்டம்) எஸ்.ரவிச்சந்திரன், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், கணக்கு அலுவலர்கள் லட்சுமிபிரபா (குடிநீர் பிரிவு), மாணிக்கம் (வருங்கால வைப்புநிதி), மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....