கோவை : வேட்டை தடுப்பு காவலர்களுக்கான பணியிடங்களைத் தேர்வு மூலம் நிரப்பும் அரசின் முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி கோவை உள்பட தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த வேட்டைத் தடுப்பு காவலர்கள் முடிவு செய்துள்ளனர்.

சமூக வனவியல் மற்றும் வனவிரிவாக்கல் பிரிவின் கீழ் பணியாற்றி வரும் வேட்டை தடுப்பு காவலர்களை, தேர்வுகள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் கடந்த 18-ம் தேதி ஒருநாள் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் டாடாபாத் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் 1,119 வேட்டை தடுப்பு காவலர்கள் இந்தப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு 5 நாட்களான நிலையிலும், தமிழக அரசு இவர்களது கோரிக்கைகள் மீது அரசு செவி சாய்க்கவில்லை.

இந்த நிலையில், வரும் திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
"மாநில தலைநகரில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம். மேலும், எங்களது தலைமை அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தி, எங்களின் நிலைப்பாட்டினை தமிழக அரசு புரிந்து கொள்ள முயற்சிப்போம்," என்றார் வேட்டை தடுப்பு காவலர் ஒருவர்.
வேட்டை தடுப்பு காவலர்களின் இந்தப் போராட்டத்தினால், வனவிலங்குகள் ஊடுருவல் தடுத்தல், ரோந்து பணிகள் மற்றும் சுற்றுலா தடைபட்டுள்ளது. அதேவேளையில், நவமலைப் பகுதியில் காட்டு யானைக் கூட்டங்கள் வீடு ஒன்றை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.