மேட்டுப்பாளையத்தில் விளைநிலங்களை சூறையாடிய காட்டுயானைகள் : ரூ. 5 லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதம், விவசாயிகள் கவலை

கோவை : மேட்டுப்பாளையத்தில் விளைநிலங்களில் புகுந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான வாழை, தென்னை உள்ளிட்ட விவசாயப் பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கோவை : மேட்டுப்பாளையத்தில் விளைநிலங்களில் புகுந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான வாழை, தென்னை உள்ளிட்ட விவசாயப் பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நெல்லிமலை வனத்தை ஒட்டி பல ஏக்கர் பரப்பளவில் வாழை, தென்னை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறும் காட்டுயானைகள், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நேற்று இரவு நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைக் கூட்டம், தாசம்பாளையத்தில் ராஜன் மற்றும் சின்னராஜ் ஆகியோரது விவசாய நிலங்களில் புகுந்து, 2,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும் சேதப்படுத்தின. இதனையடுத்து, இரவு நேரம் என்பதால் விவசாயிகள் ஒன்று சேர்ந்து டார்ச்சு லைட்டுகள் அடித்தும், பட்டாசுகளை வெடித்து யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். யானைகளால் சேதமடைந்த பயிர்களின் மதிப்பு ரூ. 5 லட்சம் என விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.



கடந்த சில வாரங்களாக மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டுயானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து தொடர்ந்து நடைபெற்று வருவதை வனத்துறை கட்டுப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், காட்டுயானைகளால் ஏற்பட்ட பயிர்சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வனத்துறைக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...