ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

கோவை : ரயில்வே துறையினை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.


கோவை : ரயில்வே துறையினை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.



மத்திய அரசின் ரயில்வே துறை தனியார்மயமாக்கல் நடவடிக்கையைக் கண்டித்து கோவை கூட்ஸ்செட் சாலையில் உள்ள ரயில்வே பணிமனை அலுவலகத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 



இதையடுத்து, செய்தியாளர்களுக்கு அதன் பொதுச்செயலாளர் கண்ணையா கூறியதாவது :- இலாபகரமாக இயங்கும் ரயில்களை தனியாருக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, தென்னக ரயில்வேயில் சென்னை - மதுரை எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை - கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களை தனியாருக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

ரயில்கள் தனியாருக்கு கொடுத்தால் ரயில் டிக்கெட்டுகளின் விலை உயரும். ரூ. 10 பிளாட்பாரம் டிக்கெட் நூறு ரூபாயாக உயரும். இதனால், நடுத்தர, ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தென்னக ரயில்வேயில் 30 ரயில் நிலையங்களை மத்திய அரசு தனியாருக்கு ஒப்படைக்க உள்ளது. ரயில்வே துறையினை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம், என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....