சூயஸ் திட்டப் பணிகளால் சேதமாகும் ஆர்.எஸ்.புரம் சாலைகள் : விபத்திற்கு வழிவகுப்பதாக பொதுமக்கள் புகார்

கோவை : சூயஸின் குடிநீர் திட்டப் பணிகளுக்காக குழி தோண்டப்படுவதால் சாலைகள் மிகவும் சேதமாகிவிட்டதாகவும், மழை காலங்களில் இதுபோன்ற மோசமாக காட்சியளிக்கும் சாலைகளால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கோவை : சூயஸின் குடிநீர் திட்டப் பணிகளுக்காக குழி தோண்டப்படுவதால் சாலைகள் மிகவும் சேதமாகிவிட்டதாகவும், மழை காலங்களில் இதுபோன்ற மோசமாக காட்சியளிக்கும் சாலைகளால் விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 



கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணிநேர குடிநீர் விநியோகத் திட்டப் பணிகள் முதற்கட்டமாக ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் அனைத்து சாலைகளும் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தோண்டப்படும் மண் சாலைகளுக்கு அருகாமையிலேயே கொட்டப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றன. இதனால், போக்குவரத்து பெரும் பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். 



குறிப்பாக, நேற்று முன்தினம் லேசாக மழை பெய்து வந்த நிலையில், மோசமான இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் வலுக்கி கீழே விழுந்தனர். இந்த விபத்தில் வாகனத்தில் சென்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சூயஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட என்ஜினியர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து ஒரே இரவில் சாலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதனால், பொன்னுரங்கம் மற்றும் டி.வி. சுவாமி சாலைகள் விபத்து ஏற்படாத வண்ணம் தற்காலிகமாக சீர்செய்யப்பட்டது. இந்தப் பணிகளை கோவை மாநகராட்சியின் உயர் அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.



இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது :- குடிநீர் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட குழாய்களால் சாலைகள் சேதமாகியிருப்பது உண்மைதான். இந்தப் பணிகள் முடிந்தவுடன் அனைத்து குழிகளும் முறைப்படி மூடப்படும். தற்போது, தற்காலிகமாக மட்டுமே சூயஸ் நிறுவனத்தால் மூடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி குடிநீர் திட்டப் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் சாலைகள் சீர்செய்யப்படும். நகரின் முக்கியப் பகுதியாக ஆர்.எஸ்.புரம் இருப்பதால், எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்கும் வகையில் பணிகள் மெதுவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்றார்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...