கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட போத்தனூர் காவல் எல்லையில் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதற்கான துவக்க விழாவை மாநகர காவல் ஆணையாளர் தொடங்கி வைத்தார்.
கோவை : கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட போத்தனூர் காவல் எல்லையில் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதற்கான துவக்க விழாவை மாநகர காவல் ஆணையாளர் தொடங்கி வைத்தார்.

கோவை மாநகரில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல், கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தவும், குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை விரைவாக கைது செய்யவும் மூன்றாம் கண் என சொல்லப்படுகிற கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியை மாநகர காவல்துறையினர் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். இந்த கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணியானது மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரணின் உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் மற்றும் குற்றப் பிரிவு துணை ஆணையாளர் பெருமாளின் வழிகாட்டுதலில் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக, ஆர்.எஸ்.புரத்தில் தொடங்கி பீளமேடு காவல் எல்லை, சாய்பாபா கோவில் காவல் எல்லை, காட்டூர் காவல் எல்லை ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தற்போது டி-3 போத்தனூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல, புனரமைக்கப்பட்ட புறக்காவல் நிலையமும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த துவக்கவிழா நிகழ்வில், மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண், மாநகர காவல் துணை ஆணையர்கள் பாலாஜி சரவணன், பெருமாள், உதவி ஆணையாளர் செட்ரிக் மனுவேல், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் வெற்றி செல்வன் மற்றும் கேமராக்கள் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போத்தனூர் காவல் நிலைய ஆய்வாளர் வி. மகேஸ்வரன், போக்குவரத்து உதவி ஆணையாளர் ராஜ்கண்ணா மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.