மனித உயிர்களின் மீது அலட்சியம் காட்டுகிறதா..? கோவை மாநகராட்சி : பாதாள சாக்கடையை பாதுகாப்பு உபகரணங்களின்றி சுத்தம் செய்த ஊழியர்களை தடுத்து நிறுத்திய வழக்கறிஞர்

கோவை : விதிகளை மீறி கோவையில் பாதாள சாக்கடையை தூய்மைப்படுத்தும் இயந்திரங்கள் இன்றி, துப்புரவு பணியாளர்களே சுத்தம் செய்ததை வழக்கறிஞர் ஒருவர் தடுத்து நிறுத்தினார்.

கோவை : விதிகளை மீறி கோவையில் பாதாள சாக்கடையை தூய்மைப்படுத்தும் இயந்திரங்கள் இன்றி, துப்புரவு பணியாளர்களே சுத்தம் செய்ததை வழக்கறிஞர் ஒருவர் தடுத்து நிறுத்தினார்.



100 அடி சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பு நீக்கும் பணியில் இயந்திரங்களைப் பயன்படுத்தாமல், துப்புரவு பணியாளர்களே இறங்கி தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாகச் சென்ற வழக்கறிஞர் ஒருவர், எந்தவித உபகரணங்களும் இல்லாமல் சாக்கடைகளை மனிதர்களே தூய்மைப்படுத்துவது விதிகளை மீறிய செயல் எனக் கூறி, அந்தப் பணிகளை தடுத்து நிறுத்தினார். மேலும், இது தொடர்பாக துப்புரவு ஆய்வாளரை தொடர்பு கொண்டு, மேற்கொண்டு இந்தப் பணிகளை செய்யக் கூடாது என அறிவுறுத்தினார். 



இது தொடர்பாக வழக்கறிஞர் டென்னிஸ் கூறுகையில், "எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி துப்புரவு பணியாளர்கள் சாக்கடையின் அடைப்பை எடுத்துக் கொண்டிருப்பதை பார்த்தேன். உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தினேன். பின்னர், இது தொடர்பாக துப்புரவு ஆய்வாளரை அழைத்து கேட்ட போது, அவர் சாக்கடையை சுத்தம் செய்கிறார்கள் என பதிலளித்தார். அப்போது, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு அவருக்கு நினைவு கூர்ந்தேன். இதைத் தொடர்ந்து, உடனடியாக அந்தப் பணிகளை அவர் நிறுத்த ஆணையிட்டார். ஆனால், பாதாள சாக்கடைகளை தூய்மைப்படுத்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறதா..? என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது," என்றார். 

இது குறித்து கோவை மாநகராட்சி துணை ஆணையர் பிரசன்னா ராமசாமியிடம் கேட்டபோது, "கோவை மாநகராட்சி இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கும். சம்பந்தப்பட்ட துப்புரவு ஆய்வாளர் மீதான இந்தப் புகார் நிரூபணமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களை கோவை மாநகராட்சி நிர்வாகம் ஒருபோதும் ஊக்குவித்தது இல்லை," என்றார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...