அரவைக் கொப்பரை தேங்காய் கிலோவுக்கு விலை ரூ. 95.21-ஆக நிர்ணயம் செய்தது தமிழக அரசு

கோவை : அரவைக் கொப்பரை தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 95.21 எனவும், பந்து கொப்பரை தேங்காய்க்கு ரூ.99.20 என்றும் தமிழக அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.

கோவை : அரவைக் கொப்பரை தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 95.21 எனவும், பந்து கொப்பரை தேங்காய்க்கு ரூ.99.20 என்றும் தமிழக அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நல்லூரிலுள்ள கூட்டுறவு சங்க வளாகத்தில் நேற்று விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையத்தினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் வி. ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிசாமி, வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- கோவை மாவட்டத்தில் டான்பெட் மூலமாக கொப்பரை கொள்முதல் மையங்கள் துவக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பொள்ளாச்சி பாலக்காடு சாலை நல்லூரில் உள்ள பொள்ளாச்சி கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் முதல் கொள்முதல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான கொள்முதல் விலை அரவைக் கொப்பரை தேங்காய்க்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 95.21 எனவும், பந்து கொப்பரை தேங்காய்க்கு ரூ. 99.20 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளால் வழங்க வேண்டிய கொப்பரை தேங்காயின் தரம் அரசினால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், இதன் ஈரப்பதம் 6 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பூஞ்சாணம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை தேங்காய், சுருக்கம் கொண்ட கொப்பரை தேங்காய் அதிகபட்சம் 10 சதவீதம் மட்டுமே இருக்கலாம். இதன் ஈரப்பதம் அதிகபட்சம் 7 சதவீதம் வரை இருக்கலாம். அதன் சுற்றளவு குறைந்தபட்சம் 75 மில்லி மீட்டர் இருக்க வேண்டும். கொப்பரைக் கொள்முதலுக்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி கொள்முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

கடந்த ஆண்டுகளில் தென்னை விவசாயிகளுக்கு வருவாய் மற்றும் வேளாண்துறை மூலம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகள் நடப்பு ஆண்டிற்கு மேற்படி அடையாள அட்டைகளை வருவாய்த்துறை மூலம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். புதுப்பித்த அடையாள அட்டைகளைக் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பதிவு செய்தோ அல்லது விவசாயிகள் தங்களது சிட்டா, பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக விவர நகல்களுடன் தாங்கள் சார்ந்த கூட்டுறவு விற்பனை சங்கத்தில் அல்லது, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து, தங்களது கொப்பரை தேங்காயினை ஒப்படைக்கலாம். மேலும், அலுவலர்களால் தர ஆய்வு செய்து தேர்வு செய்து எடையிடப்பட்டு, அதற்கான விலை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

கொப்பரை தேங்காய் நேபெட் நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும். இதற்கு வேளாண் விற்பனை மற்றும் வணிக துறையின் தர நிர்ணய அலுவலர்கள் தனியே நியமிக்கப்பட்டுள்ளனர். தென்னை விவசாயிகளின் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்த திட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டு கொப்பரை தேங்காய்களை நல்லவிலையில் விற்று பயனடையலாம், என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...