கோவை : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் பி.எஸ்.ஜி. கிருஷ்ணம்மாள் கல்லூரியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

தமிழக வனத்துறை மற்றும் சத்தியமங்கலம் பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் இயற்கை மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக தூய்மைப் பணிக்கு கடந்த 21-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பி.எஸ்.ஜி. கிருஷ்ணம்மாள் கல்லூரியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகளும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் வரையிலான சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள வனப்பகுதியில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அவர்கள் சேகரித்தனர். இந்த கழிவுகளை வனத்துறையினர் அப்புறப்படுத்தினர்.