நடிகர் சந்தானம் ஏ-1 திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி மேற்கு மண்டல ஐ.ஜி.யிடம் மனு

கோவை : நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவரவுள்ள ஏ-1 திரைப்படத்தை தடை செய்யக் கோரி கோவை பந்தய சாலையில் உள்ள மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை : நடிகர் சந்தானம் நடிப்பில் வெளிவரவுள்ள ஏ-1 திரைப்படத்தை தடை செய்யக் கோரி கோவை பந்தய சாலையில் உள்ள மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சந்தானம் மற்றும் ஜான்சன் தயாரிப்பில் ராஜ்நாராயணனின் குழுவினரால் எடுக்கப்பட்ட படம் ஏ-1. இத்திரைப்படம் வரும் 26-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டீஸர் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில், வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், ஆஃபாயில் சாப்பிட்டு பிராமணப் பெண் தனது காதலை நிரூபிப்பது போன்ற காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இதுபோன்ற காட்சிகள் பிராமணர்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக பிராமண சங்கங்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.



தமிழகம் முழுவதும் இந்து அமைப்புகள், பிராமண சமுதாய அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி காவல் உயர் அதிகாரிகளிடம் அடுத்தடுத்து பல்வேறு புகார் மனுக்களை கொடுத்து வருகின்றனர்.



இந்த நிலையில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யாவிடம் அகில பாரத பிராமணர் சங்கத்தினர் இன்று புகார் மனு அளித்தனர். மேலும், இந்தத் திரைப்படம் சாதிக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாலும், இத்திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதோடு, நடிகர் சந்தானம், ஜான்சன் மற்றும் அக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனில் பிராமணர்கள் அனைவரும் ஒன்று கூடி உலக அளவில் மிகப் பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாகவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...