கோவை : பகுதி மேம்பாட்டின் அடிப்படையில் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேலும் 4 வார்டுகள் சேர்க்கப்பட்டன.

கோவை மாவட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 16.39 சதுர கி.மீ. பரப்பளவுடைய 14 வார்டுகளில் பல்வேறு முக்கிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பிற பகுதிகளில் இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் நிதி பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், அதற்கு தீர்வு காணும் விதமாக கூடுதலாக 72,86,95 மற்றும் 99 ஆகிய வார்டுகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கான ஒப்புதல் நேற்று அளிக்கப்பட்டது. இதையடுத்து, கூடுதலாக சேர்க்கப்பட்ட 12 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட 4 வார்டுகளிலும் இந்தத் திட்டங்களை செயல்படுத்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
சென்னையில் நேற்று நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி வாரியத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையரும், கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் இயக்குநர் ஜே. ஷ்ரவன்குமார் கலந்து கொண்டு, பகுதி மேம்பாட்டின் அடிப்படையில் கூடுதலாக 4 வார்டுகள் சேர்ப்பதற்கான ஒப்புதலை வாங்கினார். அதோடு, வெள்ளலூர் குப்பை கிடங்கு மற்றும் உக்கடம் கழிவுநீர் மேலாண்மை நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கொண்டு வரவும் அனுமதி பெறப்பட்டது. மேலும், ரூ. 19.5 கோடியில் ஹாக்கி மைதானம், ரூ.2.88 கோடி செலவில் புதிய உபகரணங்கள், ரூ. 2.55 கோடி செலவில் உக்கடம் கழிவுநீர் மேலாண்மை நிலையத்தில் இருந்து வெள்ளலூருக்கு தண்ணீரைக் கொண்டு செல்வதற்கான உந்துநிலையம் மற்றும் அதற்கான வசதிகளை அமைத்தல், ரூ. 4.81 கோடியில் உக்கடம் சூரிய மின்நிலையம் மற்றும் அதற்கான சுற்றுச்சுவர், சாலைகள் மற்றும் எல்.இ.டி. விளக்குகள் அமைப்பதற்கான ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.