கோவை : பொதுமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஜீவா நகர் குடியிருப்புகளை காலி செய்ய கோவை மாநகராட்சி நிர்வாகம் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் சாலை அருகே உள்ள ஜீவா நகரில் கடந்த 40 ஆண்டுகளாக ஐநூறுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புவாசிகளுக்கு கீரணத்தம் அருகே குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகளை காலி செய்து விட்டு கீரணத்தத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வீடுகளுக்கு இடம்பெயருமாறு கோவை மாநகராட்சி கால அவகாசம் கொடுத்திருந்தது.

இருப்பினும், கடந்த பிப்ரவரி மாதம் ஜீவா நகரில் இருக்கும் வீடுகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வீடுகளை அப்புறப்படுத்தும் பணிகளைக் கோவை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, கோவை மாநகராட்சியின் வேண்டுகோளினை ஏற்று, ஜீவா நகர் குடியிருப்புகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், அறிவித்தபடி ஜீவா நகர் குடியிருப்புகளை அகற்ற கோவை மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் இன்று அப்பகுதிக்கு சென்றனர். ஒரு சில வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டு வந்த நிலையில், குடியிருப்பை காலி செய்ய இன்னும் ஒரு சில வாரங்கள் அவகாசம் வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள், மேலும் ஒரு வார காலம் அவகாசம் அளிப்பதாகக் கூறிவிட்டு, வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.
இது தொடர்பாக மாநகராட்சியின் மூத்த அதிகாரி கூறுகையில், "ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கான டோக்கன் கிடைக்கப்பெறாத ஜீவா நகர் குடியிருப்புவாசிகளுக்கும், கீரணத்தம் பகுதியில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எனவே, இங்கிருந்து வெளியேறுபவர்கள் எப்போது வேண்டுமானாலும், ஒதுக்கப்பட்ட வீடுகளில் குடிபெயரலாம். உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடியே, குடியிருப்புகளை காலி செய்யும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இல்லையெனில், நீதிமன்ற அவமதிப்பாகி விடும்," என்றார்.