5 நிமிடத்தில் 10,000 மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டம் : சிறுதுளி அமைப்பின் மாபெரும் முயற்சியில் 5,000 பேர் பங்கேற்பு

கோவை : சிறுதுளி மற்றும் கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் இணைந்து வெறும் 5 நிமிடத்தில் 10,000 மரக்கன்றுகளை நடவு செய்யும் மாபெரும் பணி வரும் 25-ம் தேதி நடக்கிறது.

கோவை : சிறுதுளி மற்றும் கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் இணைந்து வெறும் 5 நிமிடத்தில் 10,000 மரக்கன்றுகளை நடவு செய்யும் மாபெரும் பணி வரும் 25-ம் தேதி நடக்கிறது. 

காடுகள் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதுளி மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் இணைந்து இந்த மாபெரும் முயற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன்குமார் ஜடாவத் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். 

குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் நினைவு தினத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக சிறுதுளி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னார்வலர்கள் 7397666833 என்ற எண்ணிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமோ சிறுதுளி அமைப்பை வரும் 23-ம் தேதிக்கு முன்னதாக தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...