நீலகிரி : குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து குன்னூர் நகராட்சி அலுவலகம் மற்றும் அதிகாரிகளை பெண்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டத்தில் எதிர்பார்த்தபடி பருவமழை பெய்யாததால் நாளுக்குநாள் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமுள்ள தாலுகாவாக குன்னூர் தாலுகா உள்ளது. இங்கு நகரப்பகுதிக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் 43.6 அடி உயரம் கொண்ட ரேலியா அணையில் 10 அடி மட்டுமே தற்போது தண்ணீர் உள்ளது. இதனால், நகரப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய குன்னூர் நகராட்சி தடுமாறி வருகிறது. பல இடங்களுக்கு மாதக்கணக்காக குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், குன்னூர் நகரில் 8 மற்றும் 9-வது வார்டுகளில் 20 நாட்களாக நகராட்சி நிர்வாகம் குடிநீர் விநியோகம் செய்யாததால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். அங்கு வந்த நகராட்சி அதிகாரியையும் சூழந்து தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர்களை அதிகாரி தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றபோது, அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, நாளை மறுநாள் குடிநீர் வழங்குவதாக அதிகாரி உறுதியளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.