சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி காங்கேயம் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூர் : முறையாக குடிநீர் வழங்காத திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூர் - காங்கேயம் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : முறையாக குடிநீர் வழங்காத திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திருப்பூர் - காங்கேயம் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெங்கபாளையம், வண்ணாந்துறை புதூர், புளியாண்டம்பாளையம், வெள்ளி மலை, ஏரிப்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் கடந்த 3 மாத காலமாக குடிநீர் வழங்கவில்லை. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்தை அணுகி குடிநீர் சீராக வழங்கக்கோரியும், பல இடங்களில் குடிநீர் வசதி இல்லாமல் உள்ள பகுதிகளில் குடிநீர் வசதி செய்து தரக் கோரியும் பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 



இந்த நிலையில், உடனடியாக சீரான குடிநீர் வழங்கவும், குடிநீர் வசதி இல்லாத பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரக்கோரி வலியுறுத்தியும் 300-க்கும் மேற்பட்ட மக்கள் காங்கேயம் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் 

அரசு பேருந்தின் சக்கரத்தின் அடியில் படுத்து, உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் காங்கேயம் - திருப்பூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அவினாசிபாளையம் போலீசார் நேரில் சென்று குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, குடிநீர் சீராக விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் 

உறுதியளித்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...