கோவை : தனியார் மருத்துவமனைகளில் ரூ. 10 லட்சம் மதிப்பில் செய்யப்படும் இரத்த நாள அறுவை சிகிச்சை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக பயனாளிக்கு இலவசமாக செய்யப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற தினமும் கோவை உட்பட நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் அண்டை மாநிலமான கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வருகின்றனர். இந்த மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு அதிநவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது. முந்தைய நாட்களில் முக்கியமான இருதய அறுவை சிகிச்சைகள் செய்ய சென்னைக்கு செல்ல வேண்டி இருந்தது. ஆனால், தற்போது கோவை அரசு மருத்துவமனையிலேயே அனைத்து சிகிச்சைகளும் கொடுக்கும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது கோவை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக இரத்தநாள அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அசோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது :- ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் பழனிச்சாமி. தமணி நாளம் வீக்கம் ஏற்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக வந்திருந்தார். சுமார் 1.5 சென்டி மீட்டர் விட்டம் இருக்க வேண்டிய தமணி நாளம், இவருக்கு சுமார் 10 மடங்கு பெரிதாகி 15 சென்டி மீட்டரில் இருந்தது. உடனடியாக இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு,, கடந்த திங்கட்கிழமை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சுமார் 10 லட்சம் மதிப்பில் தனியார் மருத்துவமனையில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை, தற்போது காப்பீட்டு திட்டம் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. ஒரு சில தனியார் மருத்துவமனையில் மட்டுமே செய்யப்பட்டும் இந்த அறுவை சிகிச்சை முதல் முறையாக கோவை அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது, எனக் கூறினார்.