நீலகிரி : குன்னூர் அருகே நாட்டு வெடிகுண்டில் சிக்கி படுகாயமடைந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது.

வெலிங்டன் கன்டோன்மென்ட் அருகே சுற்றித் திரிந்த காட்டெருமை விவசாய தோட்டத்தில் காட்டுப் பன்றியைக் கொள்வதற்காக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்தது. இதனால், வாயில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக, உணவு உட்கொள்ளவோ, நீர் அருந்தவோ முடியாமல் தவித்து வந்தது. இந்த நிலையில், காயங்களுடன் காட்டெருமை வனப்பகுதியில் படுத்துக் கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற வனத்துறையினர் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி காட்டெருமை உயிரிழந்தது.