மூத்த எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிப்பு

கோவை : இலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பினை ஆற்றிய தமிழின் மூத்த எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கோவை : இலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பினை ஆற்றிய தமிழின் மூத்த எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

கொடிசியா பப்பாசி அமைப்புடன் இணைந்து நடத்தும் கோவை புத்தகத் திருவிழா கடந்த 19-ம் தேதி தோடங்கியது. வரும் 28-ம் தேதி வரை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. புத்தகத் திருவிழாவினை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் இலக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பினை ஆற்றிய தமிழின் மூத்த எழுத்தாளரைத் தேர்ந்தெடுத்து வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது எஸ்தர், கடல்புரத்தில், ரெயீனிஸ் அய்யர் தெரு, கம்பாநதி உள்ளிட்ட புகழ்மிக்க பல நூல்களின் ஆசிரியரான எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு வழங்கப்பட்டது. இவ்விருது வாழ்த்துப் பட்டயமும், ஒரு லட்சம் ரூபாயும் உள்ளடக்கியது. 

இந்த விருதினை வழங்கி வாழ்த்துரை வழங்கிய கலாப்ரியா பேசும்போது, "வண்ணநிலவனை வாழ்த்திப் பேச என்னை விட பொருத்தமானவர் எங்களின் அண்ணனாகிய வண்ணதாசன் அவர்கள்தான். கொங்கு மண்டலம் எப்போதும் கலைஞர்களைக் கொண்டாடுவதில் முதன்மையாகத் திகழ்கிறது. வண்ணநிலவனுக்கு இந்த விருது அளிக்கப்பட்டது. திருநெல்வேலிக்காரர்களுக்குப் பெருமையான தருணம். மண்சார்ந்த வாழ்க்கைச் சார்ந்த கதைகளைத் தீவிரமான நடையில் எழுதியவர் வண்ணநிலவன். அவர் இந்த விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர். வண்ணநிலவன் தன் இலக்கிய சாதனைகளைப் பெரிதாக கருதிக்கொள்பவர் அல்ல. தனது எழுத்தின் பலத்தை அவர் உணர்ந்ததே இல்லை. அசோகமித்திரன், ஜானகிராமன் போன்ற எழுத்துலக ஜாம்பவான்கள் அவரது கடல்புரத்தில் நாவலால் ஈர்க்கப்பட்டார்கள். என்றும் வாழும் கதாபாத்திரங்களான எஸ்தர், பிலோமினா ஆகியோரால் தமிழ்வாசகர்கள் ஈர்க்கப்பட்டார்கள், என்றார். 

விருதினைப் பெற்றுக்கொண்ட வண்ணநிலவன் ஏற்புரை வழங்கினார். எழுத்தாளர்களை கெளரவிக்கும் கொடிசியாவிற்கும் வாசகர்களுக்கு நன்றி கூறினார். நிகழ்வில் எழுத்தாளர்கள் நாஞ்சில்நாடன், வண்ணதாசன், சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொடிசியாவின் நிர்வாகிகள் ராமமூர்த்தி, விஜய் ஆனந்த், தேவராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...