அண்ணா விசுவாசிகளுக்கு தி.மு.க. தாய்க்கழகம் அல்ல..! தி.மு.க. கலைஞரின் குடும்பச் சொத்து : அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்

திருப்பூர் : அண்ணாவின் விசுவாசிகளுக்கு தி.மு.க. தாய்க்கழகம் இல்லை என்றும், தி.மு.க. கலைஞரின் குடும்ப சொத்து என திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : அண்ணாவின் விசுவாசிகளுக்கு தி.மு.க. தாய்க்கழகம் இல்லை என்றும், தி.மு.க. கலைஞரின் குடும்ப சொத்து என திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 



திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கூட்டுறவு துறை சார்பில் கொப்பரை கொள்முதல் மையம் துவக்கவிழா நடைபெற்றது. இதில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டு கொள்முதல் மையத்தை திறந்து வைத்தனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது :- கூட்டுறவு துறையில் அம்மாவின் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் கூட்டுறவு துறையில் நடந்த முறைகேடுகளையும் சரி செய்து சிறப்பாக பணியாற்றி வருகிறோம். தி.மு.க. அண்ணாவின் விசுவாசிகளுக்கு தாய்க்கழகம் கிடையாது. அது கலைஞரின் குடும்பச்சொத்து. கலைஞருக்கு பிறகு அவரது வாரிசுகளே தலைமைப் பொறுப்பில் இருந்து வருகின்றனர். அ.தி.மு.க.வினர் ஸ்டாலினின் அழைப்பைப் புறந்தள்ளிவிடுவர். உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் அ.தி.மு.க.வின் ஆட்சியே, அதற்கான அட்டவணைகளை எடப்பாடி போட்டு வைத்துள்ளார். அதனால், நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். ஸ்டாலினின் பொய்யான வாக்குறுதியினை மக்கள் இனியும் நம்பப்போவதில்லை. வேலூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும், என பேட்டியளித்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...