தாமதமாக ஏவப்பட்டாலும் சந்திராயன் 2-க்கு எந்த பாதிப்பும் இல்லை : இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை

கோவை : சந்திரயான் 2 விண்வெளி ஏவுகணை ஒரு வாரம் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டதாலும், அதற்கு எந்த பாதிப்பும் இல்லை என தமிழக அரசின் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.


கோவை : சந்திரயான் 2 விண்வெளி ஏவுகணை ஒரு வாரம் தாமதமாக விண்ணில் ஏவப்பட்டதாலும், அதற்கு எந்த பாதிப்பும் இல்லை என தமிழக அரசின் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். 

குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியின் கணினித் துறைகள் நடத்திய அறிவியல் கண்காட்சியை சிறப்பு விருந்தினர் இஸ்ரோ முன்னாள் தலைவரும், தமிழக அரசின் மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை இன்று தொடங்கி வைத்தார். 

முன்னதாக, நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- நமது நாடு மற்ற நாடுகளைவிட மிகவும் குறைந்த செலவில் ஏவுகணையினை செலுத்தி வருகிறது. நமது ஆராய்ச்சியாளர்களின் மூளை ஏவுகணை தொழில்நுட்பத்தில் உலகம் வியக்கும் அளவிற்கு பெருமைப்பட வைத்துள்ளது. நாம் 40 வருடங்களுக்குப் பின் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டாலும், நிலவின் ஆராய்ச்சியில் நமது நாடு இப்பொழுது உலகம் பாராட்டும் நிலைக்கு வந்துள்ளது. நிலவில் நீர் இருப்பதனை துல்லியமாகக் கண்டுபிடித்த நாடு நமது நாடுதான். இதனால், தற்பொழுது 70 நாடுகள் ஏவுகணை தயாரிப்பில் நம்மை நாடி வருகின்றனர். அதேபோல, நாம் ஒரே நேரத்தில் 20 ஏவுகணைகளை தயாரிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளோம். 

இப்பொழுது செல்லும் சந்திராயன் இரண்டு மாபெரும் புதிய செயல்களை செய்ய உள்ளது. சந்திரயான் 2 விண்வெளித் துறையில் மற்றொரு மைல்கல் மற்றும் உலகில் இந்தியாவிற்கு பெரிய இடத்தினை ஏவுகணைத்துறையில் பெற்று தரவுள்ளது. தற்பொழுது நடைபெற்று வரும் ஆராய்ச்சிக்கு இது மேலும் பல நல்ல பலன்களை தரவுள்ளது. நமது விஞ்ஞானிகளின் மூளையினை சரியாகப் பயன்படுத்தினால் உலகில் மாபெரும் இடத்தினை நாம் பெறமுடியும். கல்வி நிறுவனங்கள் சமூகத்தின் தேவையினை நிறைவேற்ற மாணவர்களை தயார்படுத்த வேண்டும். அதேபோல, மாணவர்களின் முன்னேற்றத்திற்கு நிறுவனங்கள் முதலிடத்தினை தரவேண்டும். கல்வியில் படிப்பதைவிட நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நான்கு வருடமும் நம்மை பரிசோதனை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நாம் நினைத்த வெற்றியினை அடைய முடியும். வகுப்பறையினை தாண்டி சிந்தியுங்கள். சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்தினால்தான் இலக்கினை மற்றும் வெற்றியினை அடைய முடியும். மூச்சு இருக்கும் வரை முயற்சி செய்ய வேண்டும், எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், இக்கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன், முதல்வர் பேபி ஷகிலா, துறைத் தலைவர் ஜீன் மார்ஸலின், சுனிதா, சரஸ்வதி, அனிதா சோபியா, அனுஜா பெட்டரிஸ் ரேணுகாதேவி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....