இளைஞர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து நீலகிரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

நீலகிரி : உதகையில் நகைக்கடை முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திய இளைஞரை 20 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் தொடர்பாக, இதுவரை யாரையும் கைது செய்யாததைக் கண்டித்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

நீலகிரி : உதகையில் நகைக்கடை முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திய இளைஞரை 20 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் தொடர்பாக, இதுவரை யாரையும் கைது செய்யாததைக் கண்டித்து கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



கடந்த 17-ம் தேதி உதகையில் உள்ள மெயின் பஜார் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சென்ற தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பிரகாஷ் (33) என்ற இளைஞரை நகை கடை ஊழியர்கள் மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த படகு இல்லம் மோகன் என்பவர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கியுள்ளனர். இதையடுத்து, படுகாயமடைந்த அந்த இளைஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை தாக்குதல் நடத்தியவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என படுகர் இன மக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

இளைஞரை தாக்கியவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உறுதி கூறியதால், கிராம மக்கள் கலைந்து சென்றனர். இருப்பினும், நடவடிகைகள் தாமதமாகும் பட்சத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப் பகுதிகளில் இருந்து படுகர் இன மக்கள் ஒன்றிணைந்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...