திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவர்களிடையே மோதல் : கற்களால் தாக்கியதில் மாணவன் பலத்த காயம்

திருப்பூர் : திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து சண்டையிட்டு கொண்டதில், டைல்ஸ் கற்களால் தாக்கியதில் ஒரு மாணவன் பலத்த காயங்களுடன் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.


திருப்பூர் : திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து சண்டையிட்டு கொண்டதில், டைல்ஸ் கற்களால் தாக்கியதில் ஒரு மாணவன் பலத்த காயங்களுடன் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆண்கள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் இடையே, எந்தப் பிரிவில் படிக்கும் மாணவர்கள் மதிப்பு வாய்ந்தவர்கள் என்பதில் தொடர்ந்து சச்சரவு நிலவி வந்துள்ளது. இதில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படிக்கும் மாணவர்கள் பள்ளியில் சிறந்த மாணவர்கள் என தங்களை காட்டிக் கொண்டு இருந்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அக்கவுண்ட்ஸ் பிரிவில் பயிலும் மாணவன் விக்ரம், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பயிலும் சாமி ஷர்மா என்ற மாணவனை தனியே அழைத்துச் சென்று பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்காக வைக்கப்பட்டு இருந்த கல்லை எடுத்து தலையில் அடித்துள்ளான். மேலும், சாமி சர்மா உடலின் பல்வேறு இடங்களிலும் அடித்துள்ளான்.



இதனை அடுத்து, அருகில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்த மாணவனை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், சக மாணவனை தாக்கிய விக்ரமை பிடித்து பல்லடம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பலத்த காயமடைந்த சாமி சர்மா பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....