மேட்டுப்பாளையத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்படும் பழமை வாய்ந்த மரங்கள் : களையிழந்து காணப்படும் சாலைகளால் இயற்கை ஆர்வலர்கள் கவலை

கோவை : மேட்டுப்பாளையத்தில் சாலை விரிவாக்க பணிக்காக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டு வரும் நிலையில், இதற்கு நிகராக புதிய மரங்களை நடவு செய்யும் பணிகளை மேட்டுப்பாளையம் பகுதியிலேயே மேற்கொள்ள வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : மேட்டுப்பாளையத்தில் சாலை விரிவாக்க பணிக்காக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டு வரும் நிலையில், இதற்கு நிகராக புதிய மரங்களை நடவு செய்யும் பணிகளை மேட்டுப்பாளையம் பகுதியிலேயே மேற்கொள்ள வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



பெரியநாயக்கன்பாளையம் முதல் மேட்டுப்பாளையம் வரை உள்ள 15 கிலோ மீட்டருக்கு உள்ள இருவழிச் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி ரூ. 100 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, சுமார் 16 அடி வரை ஏற்கனவே இருந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த பழமையான மரங்கள் அனைத்தும் டெண்டர் விடப்பட்டு வெட்டப்பட்டு வருகிறது. சுமார் 300-க்கும் மேற்பட்ட மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு அதனை வெட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில், 50-க்கும் பணியாளர்கள் வானுயர்ந்த மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மேட்டுப்பாளையம் முதல் பெரியநாயக்கன்பாளையம் வரை சாலையில் இரண்டு பகுதிகளிலும் பசுமை போர்த்தியது போல் இருந்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு வருவதால், சாலை முழுவதும் களையிழந்து காணப்படுவது இயற்கை ஆர்வலர்களை கவலையடையச் செய்துள்ளது.



எனவே, நீதிமன்ற உத்தரவுப்படி வெட்டப்பட்ட மரங்களுக்கு நிகராக புதிய மரங்களை நடவு செய்வதுடன், அதனை மேட்டுப்பாளையத்திலேயே நடவு செய்து பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...