கோவை : கேபிள் ஆபரேட்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை கீரணத்தம் பகுதியில் கேபிள் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தவர் கோபி. அதே பகுதியில் தேநீர் கடை நடத்தி வந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவிக்கும், கேபிள் ஆபரேட்டர் கோபிக்கும் தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்பட்டது. இதனையறிந்த ராமச்சந்திரன் கோபியை கண்டித்து உள்ளார். இந்த நிலையில், கடந்த ஆண்டு மே 5-ம் தேதி ராமச்சந்திரன் கோபியுடன் மது அருந்த சென்றுள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் குத்தி கோபியை கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ராமச்சந்திரனைச் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கேபிள் ஆபரேட்டரை கொலை செய்த தேநீர் கடை உரிமையாளர் ராமச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி குணசேகரன் தீர்ப்பு வழங்கினார்.