அடுத்தடுத்து சாதனை மைல்கல்லை எட்டும் இஸ்ரோ : வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான்-2

இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் மாபெரும் சாதனையாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 'சந்திரயான்-2’ விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் மாபெரும் சாதனையாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 'சந்திரயான்-2’ விண்கலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான் விண்கலத்தை சந்திரனில் ஆய்வு செய்ய அனுப்பியது. அந்த திட்டம் வெற்றி பெற்றதையடுத்து, சந்திரகிரகத்தின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், கடந்த 15-ந் தேதி அதிகாலை சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது. ஆனால், அன்று அதிகாலை பி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்பட்டபோது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து சந்திரயான்-2 ஏவப்படுவது நிறுத்தப்பட்டது.



இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறை சரி செய்யப்பட்ட நிலையில், 22-ந்தேதி பிற்பகல் 2.43 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது. சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ‘சந்திரயான்-2’ விண்வெளி பயணத்துக்கான 20 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று (ஞாயிறு) மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. இன்று காலை முதல் சந்திராயனை விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். சந்திராயனை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன் மற்றும் சி-25 எனப்படும் ‘கிரயோஜெனிக்’ படிநிலைக்கு திரவ ஹைட்ரோஜன் போன்றவை நிரப்பும் பணிகள் பிற்பகல் 1.40 மணியளவில் நிறைவடைந்தன.

பிற்பகல் 1.43 மணியளவில் அடுத்த ஒரு மணி நேரத்துக்கான (3600 வினாடிகள்) இறுதிக்கட்ட கவுன்ட்டவுன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, திட்டமிட்டபடி சரியாக 2.43 மணிக்கு 'சந்திரயான்-2’ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஒருகட்டமாக சந்திரனை ஆய்வு செய்யும் அளப்பரிய பெரும்சாதனையாக 'சந்திரயான்-2’ விண்கலம் இன்று வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது.

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் குவிந்திருந்த விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த காட்சியை நேரில் பார்வையிட வந்திருந்தவர்கள் அனைவரும் இந்த வெற்றியை கரவொலி எழுப்பி, மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....