லாலி ரோடு அருகே புழக்கத்தில் இருந்து வந்த சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை : லாலி ரோடு அருகே கோவில் திருவிழாவிற்காக அடைக்கப்பட்ட புழக்கத்தில் இருந்து வந்த சாலையை, மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.

கோவை : லாலி ரோடு அருகே கோவில் திருவிழாவிற்காக அடைக்கப்பட்ட புழக்கத்தில் இருந்து வந்த சாலையை, மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர். 



பாப்பநாயக்கன்புதூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது :- லாலி ரோடு சிக்னல் அருகே மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள சாலையைப் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த வருடம் கோவில் திருவிழாவின் போது மூடப்பட்ட இந்த சாலை இதுவரை திறக்கப்படவில்லை. மருதமலை, வடவள்ளி, பாப்பநாயக்கன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த பாதையை உபயோகித்து வந்தனர். பிரதான சாலையை அடையவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இது உபயோகமாக இருந்த நிலையில், திருவிழாவின் போது மூடப்பட்ட சாலை திறக்கப் படாததால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதனால், காலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பொதுமக்களின் நலன் கருதி புழக்கத்தில் இருந்த சாலை சந்திப்பு தடையை அகற்றிட வேண்டும், என மனு அளித்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...