தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்க வலியுறுத்தி அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையினர் ஆர்ப்பாட்டம்

கோவை : தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை எஸ்.சி.பட்டியலில் இருந்து நீக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையினர் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை எஸ்.சி.பட்டியலில் இருந்து நீக்கி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையினர் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



உட்பிரிவுகளை ஒன்றிணைத்து அரசாணை வெளியிட வேண்டும், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்கி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதால், மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

இது குறித்து அவ்வமைப்பினர் கூறுகையில், "தேர்தல் நேரத்தில் தங்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என வேட்பாளர்கள் உறுதி அளித்தனர். தற்போது இது குறித்து எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. மேலும், சட்டமன்றத்தில் முன்னேறிய சமூகத்தினருக்கு 10% இட ஒதுக்கீடு குறித்த சிறப்புக் கூட்டம், மாவட்டங்களை இரண்டாக பிரித்து மாற்றி அமைப்பது உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஆனால், தங்களது நீண்ட நாள் கோரிக்கை குறித்த நடவடிக்கைகள் இல்லை. தங்களது கோரிக்கையை சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், உள்ளாட்சி தேர்தலின் போது தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் வாழும் பகுதியில் தேர்தல் நடத்த விடாமல் போராட்டத்தில் ஈடுபடுவோம்," என்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...