கோவையில் பாக்சிங் வீராங்கனை தற்கொலை விவகாரம் : கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் மனு

கோவை : கோவையில் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையை தற்கொலைக்குத் தூண்டிய கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இறந்த மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை : கோவையில் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையை தற்கொலைக்குத் தூண்டிய கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி, இறந்த மாணவியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

கோவை தொண்டாமுத்தூர் சாலை பூசாரிப்பாளையத்தை சேர்ந்த புவனேஷ்வரன் என்பவரின் மகள் யுரேகா (19). பாக்சிங் வீராங்கனையான இவர், கடந்த 1-ம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். யுரேகா தற்கொலைக்கு அவரது கல்லூரி நிர்வாகமே காரணம் என குற்றம்சாட்டி வரும் அவரது பெற்றோர், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் யுரேகாவின் புகைப்படம் மற்றும் அவர் பெற்ற பதக்கங்களுடன் மனு அளிக்க வந்தனர். 

அப்போது மாணவியின் தாயார் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாக்சிங்கில் தேசிய அளவில் வெற்றி பெற்று வந்த யுரேகாவை, தொடர்ந்து பாக்சிங் விளையாடக் கூடாது எனவும், படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கல்லூரி நிர்வாகத்தினர் வலியுறுத்தி வந்தனர். இதனால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். எனது மகளின் இறப்பிற்கு காரணமான கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என மாணவியின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்தார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவியின் உருவப் படத்தையும், அவர் பெற்ற பதக்கங்களுடன் பெற்றோர் கண்ணீர் மல்க மனு அளிக்க வந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...