குன்னூர் பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைகள் வருவாய் துறையினரால் அகற்றம்

நீலகிரி : குன்னூரில் உள்ள பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைளை ஜே.சி.பி. இயந்திரங்களின் மூலம் வருவாய் துறையினர் இன்று இடித்து அப்புறப்படுத்தினர்.

நீலகிரி : குன்னூரில் உள்ள பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைளை ஜே.சி.பி. இயந்திரங்களின் மூலம் வருவாய் துறையினர் இன்று இடித்து அப்புறப்படுத்தினர்.



நீலகிரி மாவட்டத்தில் ஓடை புறம்போக்கு பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஒரு மாத காலமாக படிப்படியாக இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பேருந்து நிலையத்தில் இருந்த சில கடை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இரண்டு பழமை வாய்ந்த கடைகளை வருவாய்த்துறையினர் இன்று அகற்றினர்.

குன்னூர் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளும் சூழலில், ஆக்கிரமிப்பு கடைகள் அனைத்தும் விரைவில் அகற்றப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...