இனி நாம்தான் காங்கிரஸ்..! நம்மால்தான் காமராஜர் ஆட்சி உதயமாகும்..! : காமராஜர் பிறந்தநாள் கூட்டத்தில் ஜி.கே. வாசன் அறிவிப்பு

திருப்பூர் : 134 வருட அனுபவம் கொண்ட காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட காப்பாற்ற முடியவில்லை என்றும், இனி நாம் தான் காங்கிரஸ், நம்மால் தான் காமராஜர் ஆட்சி அமையும் என திருப்பூரில் நடந்த காமராஜர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : 134 வருட அனுபவம் கொண்ட காங்கிரஸ் கட்சியால் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட காப்பாற்ற முடியவில்லை என்றும், இனி நாம் தான் காங்கிரஸ், நம்மால் தான் காமராஜர் ஆட்சி அமையும் என திருப்பூரில் நடந்த காமராஜர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.



தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் டவுன்ஹாலில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டு, அரசு மற்றும் மாற்றுத்திறனாளி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :- இனி நாம் தான் காங்கிரஸ், நம்மால் தான் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர முடியும். 134 வருட அனுபவம் கொண்ட காங்கிரஸ் கட்சியால் 53 இடங்களை மட்டுமே பெற முடிந்துள்ளது. எதிர்கட்சி அந்தஸ்தை கூட காப்பாற்ற முடியவில்லை. மேலும், பிரதமர் கனவில் இருந்த முன்னாள் தலைவரின் வாரிசுகள் விலாசம் தெரியாமல் போய்விட்டனர். மேலும், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியின் பொய் பிரச்சாரம் அகில இந்திய அளவில் தோல்வியை சந்தித்துள்ளது. தமிழகத்தில் பொய் பிரச்சாரத்தை மக்கள் புரிந்துகொண்டார்கள் இதன் மூலம், வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும். 



தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றும் தோல்வியடைந்த நிலையிலேயே உள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் நம் சார்ந்த ஆட்சியே அமைந்துள்ளது. அதில், த.மா.காவிற்கும் பங்கு உண்டு. விவசாயிகள் நலனைப் பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு திட்டங்கள் செயல்படுத்த முயற்சித்தால், அதனை த.மா.கா. எதிர்க்கும். மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள் மக்களை அடைய பாலமாய் இருப்போம், எனக் கூறினார். 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...