சோமையம்பாளையம் அருகே ஜல் சக்தி அபியான் இயக்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

கோவை : சோமையம்பாளையம் குட்டை மற்றும் தடுப்பணைகளை தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கப்பட்ட நிலையில், ஜல் சக்தி அபியான் இயக்கம் சார்பில் நீர்வழிப்பாதையை தூர்வாருவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை : சோமையம்பாளையம் குட்டை மற்றும் தடுப்பணைகளை தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கப்பட்ட நிலையில், ஜல் சக்தி அபியான் இயக்கம் சார்பில் நீர்வழிப்பாதையை தூர்வாருவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 



கோவை மருதமலை மலையடிவாரத்தில் உருவாகும் பல நீரோடைகளில் சுமார் 7 தொகுப்புகள் இணைந்து சோமையம்பாளையம் கிராமம் வழியாக குட்டை, தடுப்பணைகளை நிறைத்து நிலத்தடி நீரை பெருக்கி, விவசாயத்துக்கும், குடிநீர் ஆதாரத்துக்கும் உதவியவாறு கஸ்தூரி பாளையம் வழியாக கோவை நகருக்குள் செல்கிறது. நொய்யல் நீர்த்தொகுப்பின் ஒரு பகுதியான இந்த ஓடை சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக நீர்வரத்தைப் பெறாத நிலையில் இருக்கிறது. அதிகப்படியான மண் எடுப்பு, ஆக்கிரமிப்பு ஆகிய காரணங்களால் சிதலமடைந்திருந்த இந்த ஓடையை சுத்தம் செய்ய வேண்டும், வீணாகும் மழை நீரை அதற்கான நீர்நிலையில் சேமிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னார்வ இளைஞர்களால் இணைந்த ஆணிவேர் அமைப்பு இரண்டு மாதங்களாக சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டது.

அதன் தொடர்ச்சியாக, மலை அடிவாரத்தில் இருந்து முதல் சேமிப்பு இடமான சோமையம்பாளையம் குட்டை மற்றும் தடுப்பணை வரை சுமார் 4 கி.மீட்டர் தூரத்துக்கு தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டுமென மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிடம் ஆணிவேர் அமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 



இதற்கு உடனே இசைவு தெரிவித்த அதிகாரிகள், ஆலயம் தன்னார்வ தொண்டு அமைப்பு உதவியுடன் நீர் மேலாண்மை இயக்கம் (ஜல் சக்தி அபியான்) மூலம் நீர்வழிப்பாதையை தூர்வாரி சுத்தப்படுத்த தொடங்கியுள்ளனர். அதற்கான தொடக்கவிழா இன்று தொடங்கியது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், ஆலயம் அமைப்பின் சந்திரசேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் சோமையம்பாளையம் பகுதியில் ஜல் சக்தி அபியான் இயக்கம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....