அகமதாபாத், பெங்களுரூ, கோவை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட 8 இந்திய நகரங்களில் உள்ள வங்கி, திரையரங்கம், உணவகம், காவல் நிலையம், அஞ்சலகம் மற்றும் நீதிமன்றம் உள்ளிட்ட பொது இடங்களில் 'மணி பர்ஸை' கீழே போட்டு அதை யார் உரியவர்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள் என்று பார்த்தார்கள்.

சில பர்ஸுகளில் 230 ரூபாய் பணமும், ஒரு சில பர்ஸுகளில் பணம் ஏதும் இல்லாமலும் கீழே போட்டிருந்தனர். அவ்வாறு நிகழ்த்தப்பட்ட ஆய்வில், மக்கள் நாம் நினைத்து பார்ப்பதைவிட நேர்மையானவர்களாக இருந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. பணம் உள்ள மணி பர்ஸை 43 சதவீத பேர் எடுத்து உரியவர்களிடம் கொடுத்து இருக்கிறார்கள். பணம் இல்லாத மணி பர்ஸை 22 சதவீதம் பேர்தான் உரியவர்களிடம் கொடுத்து இருக்கிறார்கள் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை நடத்திய மிக்கேகன் பல்கலைக்கழக பேராசிரியர் ஆலன் கூறியதாவது :- பெங்களூர், கோவை மற்றும் ஹைதராபாத் தென் இந்தியாவை பொறுத்தவரை அதிகபட்சமாக பெங்களூருவில் 66 சதவீதம் பேர் மணி பர்ஸை திரும்ப அளித்து இருக்கிறார்கள். குறைந்தபட்சமாக ஹைதராபாத்தில் 28 சதவீதம் பேர் பர்ஸை திரும்ப அளித்து இருக்கிறார்கள். பணம் இல்லாத பர்ஸை 58 சதவீத கோவை மக்கள் திரும்ப அளித்து இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் மோசமாக இருப்பது டெல்லி தான். அதாவது, 12 சதவீத மக்கள்தான் பணம் இல்லாத பர்ஸை திரும்ப அளித்து இருக்கிறார்கள். அதிலும், ஒட்டுமொத்தமாக ஆண்களைவிட பெண்கள்தான் மிக நேர்மையாக இருக்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.
சர்வதேச அளவில் இது இந்தியாவில் மட்டும் நடத்தப்பட்ட ஆய்வு அல்ல. சர்வதேச அளவில் 40 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது, என்றார்.
மேலும், 2013- 2016 ஆகிய காலக்கட்டத்தில் 40 நாடுகளில் 35 நகரங்களில் 17 ஆயிரம் பர்ஸை கீழே போட்டு இந்த ஆய்வை நடத்தப்பட்டது. சர்வதேச அளவில் பணம் உள்ள பர்ஸை திரும்ப கொடுப்பதில் டென்மார்க் முதலிடத்தில் இருக்கிறது. அதாவது, 82 சதவீத மக்கள் பர்ஸை திரும்ப அளித்து இருக்கிறார்கள். குறைந்தபட்சமாக பெரு இருக்கிறது 13 சதவீத மக்கள்தான் திரும்ப அளித்து இருக்கிறார்கள்.
பணம் இல்லாத பர்ஸை திரும்ப அளிப்பதில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. 73 சதவீத மக்கள் திரும்ப அளித்து இருக்கிறார்கள். குறைந்தபட்சமாக சீனாவில் 7 சதவீத மக்கள்தான் திரும்ப அளித்து இருக்கிறார்கள்.
இந்த ஆய்வில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் இல்லாமல் இல்லை. இந்தியாவில் இந்த ஆய்வை நடத்த சென்ற போது, கட்டடத்திற்கு அனுமதிக்க ஒரு காவலாளி லஞ்சம் கேட்டார். அது போல அவர் பர்ஸையும் திரும்ப அளிக்கவில்லை. அதுபோல இன்னொரு இடத்தில், பணத்தை உரியவரிடம் திரும்ப அளிக்க முடியவில்லை என்றால், அதை தொண்டு நிறுவனத்திடம் கொடுத்து இருப்பேன், என்று ஒருவர் கூறினார் என்கிறார் இந்த ஆய்வில் முன்னிலை வகித்த ஹூயோரிக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கிரிஸ்டீன்.