கோவை ரயில் நிலையம் அருகே இளம்ஜோடி ஒன்று மதுபோதையில் தள்ளாடியபடி ரகளையில் ஈடுபட்ட காட்சி காண்போரை முகம்சுளிக்க வைத்தது. தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி பல்வேறு கட்சிகள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வரும் நிலையில், தினத்தோறும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பெண்கள், இளைஞர்கள் மதுபோதைக்கு நாளுக்கு நாள் அடிமையாகிவருவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கோவை இரயில் நிலையம் அருகே இளம்ஜோடி ஒன்று ஆண், பெண் என்ற பேதமின்றி மதுபோதையில் தள்ளாடியபடி நடத்து சென்று அப்பகுதியில் செல்வோரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. மேலும் இருவரும் அங்கிருந்த ஆட்டோ ஒட்டுனர்கள் மற்றும் வாகனஒட்டிகளிடம் அநாகரிகமாக நடத்துக்கொண்டதும் மது மயக்கத்தில் அந்த இளம்பெண் சாலை ஒர சுவற்றில் மோதி, சரிந்துவிழும் காட்சிகளும் காண்போரை முகம்சுளிக்க வைத்தது. இதையடுத்து அங்குதிரண்ட கூட்டத்தில் ஒரு சிலர் அப்பெண்ணை தூக்க முற்பட்டதால் ஆத்திரம் அடைந்தஅவருடன் வந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தநிலையில் அவ்விருவரும் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றனர். கோவை மாநகரின் முக்கிய இடமான ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இச்சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.