விவசாயிகளை அனைத்து வகையிலும் நசுக்குகிறது மத்திய அரசு : கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கண்டனம்

கோவை : உயர்மின் கோபுரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்கிற மத்திய அரசின் முடிவிற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

கோவை : உயர்மின் கோபுரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்கிற மத்திய அரசின் முடிவிற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- உயர்மின்னழுத்த கோபுரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு கூறியிருப்பதாக தகவல் வந்துள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. விவசாயிகளை அனைத்து வகையிலும் மத்திய அரசு நசுக்க பார்க்கிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளை கொதிப்படைய செய்துள்ளது. வரும் 22, 23-ம் தேதிகளில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டெல்லி ஜந்தர்மந்தரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி தேவை என்கிற விதியை மாற்றக்கூடாது. பழைய மின்னழுத்த கோபுரங்களுக்கு வாடகை தீர்மானிக்க வேண்டும். மின்சாரத்தை புதைவட தடமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. மின்சாரம் கொண்டு செல்லும் முறை நவீனப்படுத்த வேண்டும். மத்திய அரசின் இந்த செயல் தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதற்கு சமம். அனைத்து வகையிலும் விவசாயிகளை நசுக்கும் மத்திய அரசின் முடிவை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக எம்.பி.க்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். டெல்லியில் துறை சார்ந்த மத்திய அமைச்சர்களை சந்தித்து இம்முடிவை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்துவோம், என்று அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....