தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

நீலகிரி : உதகை தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலை மிகவும் தாமதமாக சீரமைக்கப்பட்டு வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

நீலகிரி : உதகை தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலை மிகவும் தாமதமாக சீரமைக்கப்பட்டு வருவதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.



உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பிடித்துள்ள மலை சிகரமான தொட்டபெட்டா சிகரம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சென்று உதகையின் ரம்மியமான காட்சிகளையும், அழகிய இயற்கை காட்சிகளை தொலைநோக்கி மூலம் கண்டு ரசிக்காமல் செல்வதில்லை. இந்த நிலையில், தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்லும் சுமார் 3 கி.மீ. தூரம் சாலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இச்சாலை குண்டும், குழியுமாக சீரமைக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனையடுத்து, அவ்வப்போது வனத்துறையினர் சாலைகளில் குழிகளை தற்காலிகமாக சீரமைத்தாலும், மழை காலங்கள் மற்றும் வாகனங்கள் மீண்டும் செல்வதால் சாலைகள் பழுதடைந்து வருவது வாடிக்கையாகவே இருந்து வந்தது.

எனவே, இச்சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் மலைப் பகுதி சிறப்பு மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் 1 கோடியே 90 லட்சம் செலவில் தொட்டபெட்டா சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காமல் நடைபெற்று வந்த சாலை பணிகள் 95 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், அரசியல் காரணங்களால் இச்சாலைப் பணியை முழுமையாக முடிக்காமல் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காமல் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொட்டபெட்டா பகுதியில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள நூற்றுக்கணக்கானோரின் குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. 

எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து இச்சாலையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா ஆர்வலர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...