நீலகிரி : கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் காரணமாக அங்கிருந்து நீலகிரிக்கு உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு கர்நாடகா, கேரளா போன்ற பகுதியில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகரித்து காணப்படும். இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைக் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.

பொதுவாக, தனியார் பேருந்து, அரசு பேருந்து மூலம் நீலகிரியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, லேம்ஸ்ராக், டால்பினோஸ், படகு இல்லம் போன்ற சுற்றுலா பகுதிகளுக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுகிழமையான இன்று வெகுவாக குறைந்து காணப்பட்டது. கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை சீரடையும் வரை அங்கிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்படும் என்று சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.