கோவை கொடிசியா புத்தகத் திருவிழாவில் இளம் எழுத்தாளர்களுக்கு விருது

கோவை : கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக இளம் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கோவை : கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியாக இளம் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கொடிசியா பப்பாசி அமைப்புடன் இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. அதனையொட்டி இளம் இலக்கிய எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு முதல் புனைவு, கட்டுரை, கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருது தலா 25,000 ரூபாய் பணமும், விருதுச் சான்றிதழும் அடங்கியது. புனைவு நூல்களுக்கான பிரிவில் கற்றாழைப்பச்சை நூலுக்காக குணா கந்தசாமிக்கும், அபுனைவு நூல்களுக்கான பிரிவில் “தமிழ் இலக்கிய வரலாறு " நூலுக்காக ஞா.குருசாமிக்கும், கவிதை நூல்களுக்கான பிரிவில் “விரல்களில் வழியும் விரலற்றவனின் செங்குருதி” கவிதைத் தொகுப்பிற்காக சோலை மாயவன் ஆகியோருக்கும் இளம் இலக்கிய எழுத்தாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. 

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...