பட்டாசு விற்பனைக்கான அனுமதி வழங்குவதற்கு ஒற்றை சாளர முறையை கொண்டு வர வலியுறுத்தல்

கோவை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கான அனுமதி வழங்குவதற்கு ஒற்றை சாளர முறையை கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.


கோவை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கான அனுமதி வழங்குவதற்கு ஒற்றை சாளர முறையை கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

கோவை மாவட்ட பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் முதல் மாநாடு கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் நடைபெற்றது. கோவை மாவட்டம் முழுவதும் உள்ள பட்டாசு வணிகர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜாசந்திரசேகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 



அப்போது அவர் பேசியதாவது :- சீனப்பட்டாசுகளை விற்பனை செய்ய மாட்டோம் என பட்டாசு விற்பனையாளர்கள் முடிவெடுத்துள்ளோம். இருப்பினும், அரசு மற்றும் நீதிமன்றங்களின் கடுமையான கட்டுப்பாடு காரணமாக சில வியாபாரிகள் சீனப்பட்டாசுகளை வாங்கி ஏமாறுகின்றனர். மேலும், தீபாவளி பண்டிகைக்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு மட்டுமே பட்டாசு விற்பனைக்கான அனுமதி கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பட்டாசு கடை அமைத்து விற்பனை செய்பவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே அனுமதி வழங்க வேண்டும். பட்டாசு விற்பனை உரிமம் பெற ஐந்து துறைகளை அணுக வேண்டி உள்ளதால், உரிமம் பெறுவதற்கு ஒற்றை சாளர முறையை அறிமுகப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகை ஆறு மணி நேரத்திற்குள் காற்றுடன் கலந்து விடும் என நாசா கூறியுள்ள நிலையில், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் அதற்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கவில்லை. இந்தியாவில் மட்டும் பட்டாசு வெடிப்பதற்கு கால நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது கலாச்சாரத்திற்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. எனவே, இக்கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி ஏற்கனவே வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், அதில் தங்களையும் வாதியாக சேர்க்க வேண்டும், என கேட்டுக் கொண்டார்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...