கோவை : பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு பொறியியல் படித்து வந்த மாணவி தற்கொலை செய்துக்கொண்டது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் கோவை விமான நிலையம் வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் மனு அளித்தனர்.

கோவை பூசாரிப்பாளையத்தை சேர்ந்த புவனேஷ்வரன் என்பவரின் மகள் யுரேகா (19). இவர் கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்துக்கொண்டார். குத்துசண்டை போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்ற இவரை, கல்லூரியின் விளையாட்டு ஆசிரியர் பாலமுருகன், முதல்வர் சிவக்குமார், துறை தலைவர் ராஜசங்கர், துறை ஆசிரியர் ஷாஜகான் ஆகியோர் தொடர்ந்து விளையாட அனுமதிக்காததுடன், மன உளைச்சல் அளித்து வந்ததாகவும், தலித் சமூகம் என்கிற காழ்ப்புணர்ச்சியில் நடந்துக்கொண்டதாகவும் அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர். இதன் காரணமாகவே யுரேகா தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி யுரேகாவின் பெற்றோர் கோவை விமானநிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து சென்றார்.