கோவையில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா இல்லாத நகரமாக்கும் முயற்சியில் மாநகர காவல்துறையினர் : 4 நாட்களில் 272 வழக்குப் பதிவு

கோவை : கோவை மாநகரை தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா இல்லாத நகரமாக்கும் முயற்சியில் மாநகர காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கோவை : கோவை மாநகரை தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா இல்லாத நகரமாக்கும் முயற்சியில் மாநகர காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்டுள்ள பான்மசாலா குட்கா பொருட்கள் சமூக விரோதிகளின் மூலம் மறைமுகமாக விற்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்த பான் மசாலா குட்கா பொருட்களை கடத்தி வந்து அவர்களது குடோனில் பதுக்கி விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு பான்மசாலா குட்காவை ஒழிக்கும் முயற்சியில் ஏற்கனவே உணவு பாதுகாப்பு துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் விற்பனைகள் ஒழிந்த பாடில்லை.

இதில், கோவை மாநகரை பொறுத்தவரை வைசியாள் வீதி, ரங்கே கவுண்டர் வீதி, ராஜ வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் வட நாட்டைச் சேர்ந்தவர்கள் பான் மசாலா குட்கா பொருட்களை அதே பகுதியில் குடோன்களில் மறைத்து வைத்துள்ளனர். அதேபோல, புறநகர் பகுதிகளிலும் பதுக்கி வைக்கின்றனர். இப்படி பதுக்கப்படும் பான்மசாலா குட்கா பொருட்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பலமுறை பிடித்தும் இந்த சமூக விரோதிகளின் செயல்பாடுகளில் மாற்றம் நிகழவில்லை.

இந்த நிலையில், கோவை மாநகரை பான்மசாலா குட்கா இல்லாத நகரமாக்கும் முயற்சியில் மாநகர காவல் துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் தீவிரம் காட்டி வருகிறார். கோவை மாநகரில் குட்கா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில், தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறார். கோவை மாநகரக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், 'கோட்பா' எனப்படும் சிகரெட், மற்றும் பிற புகையிலை பொருட்கள் தயாரிப்புச் சட்டத்தின் கீழ், கடந்த 4 நாட்களில் மட்டும் 76, 105, 58, 33 என மொத்தம் 272வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி நடைபெறும் தொடர் நடவடிக்கைகள் மூலம் குட்கா விற்பனை முழுதும் ஒழிக்கப்படும் என காவல்துறை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...