கோவை : மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி வரை உயர்ந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தாமதமாக துவங்கிய நிலையில், தற்போது அதன் தீவிரம் அதிகரித்து பாலக்காடு மற்றும் அதன் ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்தில் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா மற்றும் பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பில்லூர் அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குந்தா, பரளி உள்ளிட்ட அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால், அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீரும் பில்லூர் அணையை வந்தடைகிறது. இதனால், இன்று காலை நிலவரப்படி 100 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர் மட்டம் 87 அடியாக இருந்த நிலையில், இரவு 91.50 அடியாக உயர்ந்து ஒரே நாளில் அணையின் நீர் மட்டம் 4 அடிக்கும் மேல் உயர்ந்தது.

இதனையடுத்து, அணையில் இருந்து மின் தேவைக்காக பில்லூர் அனையில் இருந்து 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து வருவதால், அணையின் நீர் மட்டம் மேலும் உயர்ந்து அணை நிரம்ப வாய்ப்புள்ளது. இதனால், கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அணைக்கான நீர்வரத்து 700 கன அடியாக உள்ளது.