கோவை : எம்.எல்.ஏ. அருண்குமாரின் தந்தை கடந்த வாரம் காலமான நிலையில், அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமாரின் தந்தை கோவிந்தராஜுலு உடல்நலக்குறைவால் கடந்த 10-ம் தேதி காலமானார். இந்த நிலையில், நேற்று கோவை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ., பி.ஆர்.ஜி. அருண்குமாரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். அவருடன் நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டப்பேரவை துணை தலைவர்பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் உடனிருந்தனர்.