வேலூர் மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கோவை : வேலூர் மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


கோவை : வேலூர் மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் பேட்டியளித்ததாவது :- வேலூர் மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது. கடந்த முறை குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றியதை போல, மக்களை தி.மு.க. ஏமாற்றி விட்டது. இப்போது எந்த வாக்குறுதியை மக்களிடம் அவர்கள் கொடுப்பார்கள் என பார்ப்போம். நடந்து முடிந்த தேர்தலில் செய்ய முடியாத வாக்குறுதிகளை தி.மு.க. கொடுத்தது. இனி என்ன வாக்குறுதியை அவர்களால் கொடுக்க முடியும்..? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, நடிகர்கள் கல்விக்கொள்கை குறித்த பேசி வருவது குறித்த கேள்விக்கு, ஒவ்வொருவருக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கின்றது. அதை சொல்கின்றனர்.

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்திற்கு வரும் மக்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. முன்னேற்பாடுகள் குறித்து இன்று கூட்டம் நடைபெற்றது. செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக தலைமை செயலாளர், டி.ஜி.பி ஆகியோர் நேற்று இரவே காஞ்சிபுரம் சென்று தேவையான ஏற்பாடுகளை செய்ய இருக்கின்றனர். எதிர்பாராத மக்கள் வெள்ளம் வருவதால் அதற்கேற்றபடி ஏற்பாடுகளை அரசு செய்து வருகின்றது. பக்தர்கள் வெயில், மழையில் அவதிப்படாமல் இருக்க கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, மருத்துவ வசதி, நடமாடும் மருத்துவ வசதி, 3 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. போதுமான காவல் துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர், என்றார்.

என்.ஐ.ஏ. சட்ட திருத்தத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, “சட்டம் சரியாக இருக்க வேண்டும். மக்களை காக்க எந்த சட்டம் கொண்டு வந்தாலும், இந்த அரசு அதை ஆதரிக்கும். டிக் டாக் செயலியை தடை செய்வது நல்லதுதான். இளைஞர்களுக்கு அதன் விபரீதம் தெரிவதில்லை. சில நேரங்களில் அதனால் உயிரிழப்பு ஏற்படுவதுடன், மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. இளைஞர்கள் அவற்றை தவிர்க்க வேண்டும், என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...