கோவை : வெள்ளலூர் மற்றும் ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் வெள்ளலூர், ஒத்தக்கால்மண்டபம் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை கட்டமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கு. ராசாமணி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், உதவி செயற்பொறியாளர் ராஜா, உதவி பொறியாளர் இராமசாமி, செயல் அலுவலர்கள் சசிகலா, இப்ரஹிம் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். கோவை மாவட்டத்தின் நகர்புற கிராமப்புற மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளாட்சித் துறையின் மூலம் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், குடிநீர் குழாய்கள்பொருத்துதல், மழைநீர் வடிகால் அமைத்தல், சாலைவசதிகள், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், வெள்ளலூர் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித்திட்டத்தின் கீழ் காந்தி நகர், ஆர்.என்.கே. நகர் மற்றும் எல்.ஜி.நகர் பேஸ்-3 ஆகிய பகுதிகளில் 3 கி.மீ நீளத்தில் ரூ.150 இலட்சங்கள் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினையும், ஒருங்கிணைந்த நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட பூங்கா நகர், பாலாஜி கார்டன், கந்தசாமி கவுண்டர்லே அவுட், பாப்பே கவுண்டர் வீதி மற்றும் முருகன் நகர் பகுதிகளில் ரூ.120 இலட்சம் மதிப்பீட்டில் 2,500 மீட்டருக்கு தார்சலையை பலப்படுத்தும் பணியினையும், மாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.