திருப்பூர் : சாலை பாதுகாப்பை வலியுறுத்தி ரோட்டரி சங்கங்களின் சார்பில் திருப்பூரிலிருந்து கோவை வரையிலான கல்லூரி மாணவ, மாணவியரின் சைக்கிள் பேரணியை மாநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்க வேண்டும், இருசக்கர வாகன பயணத்தின்போது ஹெல்மெட் அணிய வேண்டும், சாலைகளின் சிக்னல்களை மதித்து செல்ல வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில், ரோட்டரி சங்கங்களின் சார்பில் திருப்பூரில் இருந்து கோவை வரை மாணவ மாணவிகளின் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனை மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் துவக்கி வைத்தார். 2 மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் திருப்பூரிலிருந்து கோவை வரை சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.