தி.மு.க. இளைஞரணியின் 40-ம் ஆண்டு துவக்கவிழா கோவையில் கொண்டாட்டம்

கோவை : தி.மு.க. இளைஞரணி துவங்கி 40வது ஆண்டையொட்டி, கோவை சிங்காநல்லூரில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தளபதி இளங்கோ தலைமையில் தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கோவை : தி.மு.க. இளைஞரணி துவங்கி 40வது ஆண்டையொட்டி, கோவை சிங்காநல்லூரில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தளபதி இளங்கோ தலைமையில் தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



தி.மு.க.வின் அணிகளில் முதன்மையான அணியான இளைஞரணி துவங்கி 39 ஆண்டுகளை கடந்து இன்று 40 வது ஆண்டை எட்டியுள்ளது. இதையொட்டி, இன்று, கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தளபதி இளங்கோ தலைமையில் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். பட்டாசுகள் வெடித்தும், பேருந்து பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினர். இதில், தலைமை கழக பேச்சாளர்கள் பிரபாகரன், சிங்கை செளந்தர், வடக்கு கழக செயலாளர்கள் ராஜேந்திரகுமார், பாபு பூவேந்திரன், காயத்திரி பாலன், மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...