காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், டெல்லியின் முன்னாள் முதலமைச்சருமான ஷீலா தீட்சித் இன்று டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 81. 3 முறை டெல்லியின் முதலமைச்சராக பதவி வகித்த அவர், உடல் நலக்குறைவால் இன்று காலை 10.30 மணியளவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், பிற்பகல் 3.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.