பிரியங்கா காந்தி கைதைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை : உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோவை : உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா அருகே உம்பா என்ற கிராம பகுதியில் 36 ஏக்கர் நில தகராறு காரணமாக குஜ்சர் மற்றும் கூண்ட் பழங்குடியின மக்களிடையே மோதல் ஏற்பட்டது. கிராம தலைவர் யோகா தத் தலைமையிலான 200 பேர் கொண்ட கும்பல் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இந்த மோதலில் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து, அக்கட்சியின் உ.பி. கிழக்கு பகுதி பொது செயலாளர் பிரியங்கா காந்தி சம்பவ இடத்திற்கு செல்ல முயன்ற போது, அவரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்து பிரியங்கா காந்தி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனை அறிந்த காங்கிரஸ் கட்சியினரும் தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்காவை கைது செய்து போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்று சிறை வைக்கப்பட்டார். இதனை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக, பிரியங்கா காந்தி கைதை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மயூரா ஜெயகுமார் கூறுகையில், “சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு ஆறுதல் கூற சென்றவரை தடுத்து நிறுத்தி கைது செய்தது கண்டனத்துக்கு உரியது. மத்திய அரசு சர்வாதிகார போக்கோடு செயல்படுகின்றனர். இதே நிலை, தொடர்ந்தால் பொதுமக்களை திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, வீனஸ் மணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...