காந்திபுரம் அருகே தனியார் சிட்பண்ட்ஸ் நிறுவனம் நடத்தி மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் முற்றுகை

கோவை : காந்திபுரம் அருகே இயங்கி வரும் தனியார் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தினர் பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாகக் கூறி, மோசடி நிறுவனத்திடமிருந்து பணத்தை திரும்பப் பெற்றுத் தர வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : காந்திபுரம் அருகே இயங்கி வரும் தனியார் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தினர் பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாகக் கூறி, மோசடி நிறுவனத்திடமிருந்து பணத்தை திரும்பப் பெற்றுத் தர வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



காந்திபுரம் 100 அடி சாலையில் முத்து லேண்ட் மற்றும் முத்து சிட் பண்ட் என்ற பெயரில் தனியார் சீட்டு கம்பெனி சுமார் 8 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இந்த சீட்டு கம்பெனியின் உரிமையாளர் தமிழக வியாபாரிகள் சம்மேளனத்தின் தலைவர் பரமசிவம். இவர் தங்க நகைச் சீட்டு, மாதச் சீட்டு, நில சீட்டு போன்ற நிதி நிறுவனங்களை முத்து சிட்பண்ட் என்ற பெயரில் நடத்தி வருகிறார். இவரது நிதி நிறுவனத்தில் தினசரி நாளிதழ் மூலம் வந்த விளம்பரங்களை பார்த்து சென்ற பொதுமக்கள், தங்கநகை சீட்டு, மாத சீட்டு மற்றும் நில சீட்டு என அனைத்திலும் பணம் செலுத்தி வந்துள்ளனர்.

இதில், மாத சீட்டு மூலம் மாதம் ஆயிரம் வீதம் 24 மாதங்களுக்கு சீட்டு பிடிக்கப்பட்டு, அவர்களிடம் பணம் திரும்பக் கொடுக்கும் பொழுது ரூ. 32,000 ஆக வட்டியுடன் சேர்த்து தருவதாக கூறியதை நம்பி, பொதுமக்கள் சீட்டில் சேர்ந்து உள்ளனர். 250-க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த சிறு சேமிப்புத் திட்டத்தில் தங்களது பெயரில் பணம் போட்டு வந்துள்ளனர். இரண்டு வருடம் கட்டி முடிந்த நிலையில், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை சரியான முறையில் வழங்கவில்லை என்றும், நிலம் சரியாக பத்திரப்பதிவு செய்து தரவில்லை என்றும் அடுக்கடுக்கான பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து பணத்தை கொடுத்த பொதுமக்கள் அலுவலகத்தில் வந்து கேட்ட பொழுது, அந்நிறுவனத்தினர் பணமாக இல்லை என்றும், காசோலையாக பெற்றுக் கொள்ளுங்கள் என அனைவரிடமும் காசோலையை அளித்துள்ளனர்.



வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்ற காசோலையை வங்கியில் அளித்தபோது வங்கியில் பணம் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் நேற்று காந்திபுரம் பகுதியில் உள்ள அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனால், அப்போது சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய ரத்தினபுரி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆனால், உரிய நடவடிக்கைகள் எடுக்க காலதாமதம் செய்து வருவதால், 

பாதிக்கப்பட்டவர்கள் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டனர். 

அப்போது, சீட்டு கம்பெனி நிறுவனத்தின் உரிமையாளர் பரமசிவத்தை கைது செய்ய வேண்டும் எனவும், நாங்கள் ஏமாந்த பணம் உடனடியாக கிடைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், 32 கோடிக்கு மேல் ஏமாற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...